கல்வி திருவிழா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு  

ராமநாதபுரம் : -கல்வி திருவிழாவை முன்னிட்டு நடந்த பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கமுதி சத்திரிய நாடார் மேல்நிலைப்பள்ளியில்காமராஜர் பிறந்த நாளான கல்வித்திருநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டது.

உறவின் முறை நிர்வாகி தங்கராஜன் தலைமை வகித்தார். நிர்வாகி சக்திவேல் முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமையாசிரியர் மாரிமுத்து வரவேற்றார்.

பள்ளி மாணவர்கள் பேச்சு போட்டிகளில் பங்கேற்றனர்.

இதில் 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான பிரிவில் முதலிடத்தை கமுதி சத்திரிய நாடார் பள்ளி செ.சந்தோஷ், இரண்டாம் இடத்தை ரஹ்மானியா மெட்ரிக் பள்ளியை சேர்ந்த செ.அல்ஷிபா, மூன்றாமிடம் வளையபூக்குளம் கே.விசாலா நடுநிலைப்பள்ளி கார்த்திகா பெற்றனர்

9 முதல் 10ம் வகுப்பு வரையிலான பிரிவில் முதலிடத்தை கமுதி ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆயிஷா ஆதிபா, இரண்டாமிடம் கமுதி கவுரவா மேல்நிலைப்பள்ளி டினேஷ்கா, மூன்றாமிடம் கமுதி சத்திரிய நாடார்கள் மேல்நிலைப்பள்ளி அஷ்வினா, பிளஸ்1 முதல் பிளஸ் 2 வரையிலான பிரிவில் முதலிடம் கமுதி ரஹ்மானியா மெட்ரிக் பள்ளி காவ்யஜனனி, இரண்டாமிடம் முதுகுளத்துார் காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யமுனாதேவி, மூன்றாமிடம் கமுதி சத்திரிய நாடார்கள் மேல்நிலைப்பள்ளி பாலஸ்ரீ ஆகியோர் பெற்றனர்.

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் குகன் செய்திருந்தார்.

Advertisement