கொலையான காவலாளி தம்பி மருத்துவமனையில் அனுமதி

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரத்தில் நகை திருட்டு வழக்கு விசாரணையின் போது போலீசார் தாக்கியதில் பலியான பத்ரகாளியம்மன் கோயில் தனியார் நிறுவன காவலாளி அஜித்குமாரின் 29, தம்பி நவீன் குமார் நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நகை திருட்டு வழக்கில் அஜித்குமாருடன் அவரது தம்பி நவீன்குமாரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்று தாக்கியுள்ளனர். நவீன்குமார் காலில் ரத்தக்கட்டு ஏற்பட்டு அவதியுற்று வந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து வரும் நிலையில் காலில் போலீசார் லத்தியால் அடித்ததால் நடக்கவே முடியவில்லை என நேற்று நவீன்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சைக்கு பின் நேற்று மாலை திருப்புவனம் வந்துவிட்டார்.

மருத்துவமனையில் இருந்தபோது, திருப்புவனம் போலீசாரிடம் அளித்த புகாரில் ஜூன் 28 காலை 10:00 மணிக்கு விசாரணைக்காக தனிப்படை போலீசார் ராஜா, என்னை வேனில் அழைத்து சென்றார். திருப்புவனம் பைபாஸ் அருகே வன்னிக்கோட்டை விலக்கில் வேனை நிறுத்தி லத்தியால் என்னை காலில் அடித்தார். இதனால் கால் நரம்பில் வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

Advertisement