தேவதானப்பட்டி ஸ்டேஷனில் போலீசார் ஆட்டோ டிரைவரை தாக்கிய விவகாரம் இன்ஸ்பெக்டர் பணியிட மாற்றம்

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தேவதானப்பட்டியில் 2025 ஜனவரியில் போலீஸ் ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவர் ரமேைஷ தாக்கிய விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா மதுரை மாவட்டத்திற்கும் மற்ற போலீசார் வேறு போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தேவதானப்பட்டியில் ஜன.,14ல் போக்குவரத்திற்கு இடையூறு செய்ததாக ஆட்டோ டிரைவர் ரமேைஷ 31, போலீசார் கைது செய்தனர். அவரை தேவதானப்பட்டி ஸ்டேஷனில் வைத்து போலீசார் சிலர் தாக்கினர்.
அதே நேரம் மற்றொரு வழக்கிற்காக வழக்கறிஞர் பாண்டியராஜன் ஸ்டேஷன் சென்றிருந்தார். அவர் சென்று வந்த வீடியோ பதிவுகளை தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் விண்ணப்பித்து பெற்றார். அந்த வீடியோவில் ஆட்டோ டிரைவர் ரமேஷ் தாக்கப்படும் வீடியோவும் இடம் பெற்றிருந்தது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் போலீசார் தாக்குதலில் இறந்த அஜித்குமார் வீடியோ வைரலானது. அதைத்தொடர்நது தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் ஆட்டோ டிரைவரை போலீசார் தாக்கும் வீடியோவும் பரவியது.
வீடியோ குறித்து மாவட்ட எஸ்.பி., சிவபிரசாத் விசாரித்தார். வீடியோ அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா, எஸ்.எஸ்.ஐ., சுயசம்பு, போலீசார் மாரிச்சாமி, பாண்டி, வாலிராஜன் ஆகியோரை ஆயுதபடைக்கு மாற்றியும், ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்ஸ்சாண்டர் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் எஸ்.பி., உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்ஸ்பெக்டர் அபுதல்ஹா மதுரை மாவட்டத்திற்கும், சிறப்பு எஸ்.ஐ., சுயசம்பு, போலீசார் மாரிச்சாமி, பாண்டி, வாலிராஜன் ஆகியோர் மாவட்டத்திலுள்ள வேறு ஸ்டேஷன்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
போலீசார் மீது ஆட்டோ டிரைவர் புகார்
எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது ஆஜரான ஆட்டோ டிரைவர் ரமேஷ் கூறியதாவது: பொங்கல் பண்டிகையின் போது நண்பர்களுடன் மது அருந்திருந்தேன். தேவதானப்பட்டியில் வேகத்தடை அருகே ரோட்டை கடக்கும் போது வேகமாக வந்த பஸ் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டேன். அங்கு வந்த போலீசார் என்னை ஸ்டேஷனுக்கு இழுத்து சென்று அசிங்கமாக திட்டி தாக்கினர். குடும்ப சூழல், பயத்ததால் புகார் அளிக்கவில்லை. புகார் அளித்திருந்தால் என்னை கொன்றிருப்பார்கள். தற்போது ஐ.ஜி., ஏ.டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்துள்ளேன் என்றார்.


மேலும்
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு