டாப்செட்கோ, டாம்கோ திட்டத்தில் கூட்டுறவு வங்கியில் 'லோன் மேளா'
சென்னை:'டாப்செட்கோ, டாம்கோ' கடனுதவி திட்டங்களில், எட்டு இடங்களில் உள்ள கூட்டுறவு வங்கிகளில், 'லோன் மேளா' முகாம்கள் நடக்கின்றன.
'டாப்செட்கோ' எனும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தில், பல்வேறு திட்டங்களில் கடனுதவி வழங்கப்படுகிறது. அதன்படி, 2025 - 26ம் ஆண்டில், 3 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
@twitter@https://x.com/dinamalarweb/status/1942054174902063122twitter
அதேபோல், 'டாம்கோ' எனும் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் திட்டத்திலும், 1 கோடி ரூபாய் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்திட்டங்களில் கடன் வழங்கும் வகையில், சென்னை மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில், மாலை 4:00 மணிக்கு, 'லோன் மேளா' முகாம் நடக்கிறது. முகாம்களில் நேரடியாக அணுகி, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கடனுதவி பெற்றுக்கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்து உள்ளது.
மேலும்
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு