அ.தி.மு.க., நிர்வாகிகள் தி.மு.க.,வில் ஐக்கியம்
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி, 37வது வார்டு, அ.தி.மு.க., வட்ட செயலாளர் பிரகாஷ், 44வது வார்டு வட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர், மேற்கு மாவட்ட, அ.தி.மு.க., தலைமை உரிய மரி-யாதை தருவதில்லை எனக்கூறி, அக்கட்சியிலிருந்து விலகினர். இவர்கள் இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன், தி.மு.க.,வில் இணையும் விழா, ஓசூரில் தளி சாலையிலுள்ள திருமண மண்ட-பத்தில் நேற்று நடந்தது. மாநகராட்சி வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா வரவேற்றார்.
.மு.க., மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., மற்றும் மாநகர மேயர் சத்யா ஆகியோர் முன்னிலையில், அ.தி.மு.க., வட்ட செயலாளர்கள் பிரகாஷ், ராமச்சந்திரன் ஆகியோர், 150 க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன், தி.மு.க.,வில் இணைந்தனர். அவர்களுக்கு கட்சி சால்வை அணி-வித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆதிதிராவிடர் நலக்குழு மாவட்ட அமைப்பாளர் முனிராஜ், கிளை செயலாளர்கள் நாகேஷ், சையத் அபுது உட்பட பலர் பங்கேற்றனர். துணை மேயர் ஆனந்தய்யா நன்றி கூறினார்.
மேலும்
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு