மூதாட்டி உட்பட 3 பேர் மாயம்
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே மணியம்பாடி கிராமத்தை சேர்ந்-தவர், 17 வயது சிறுமி. கடந்த, 3ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது தாய் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் கொடுத்த புகாரில், அருளாளம் கிராமத்தை சேர்ந்த மகேஷ் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரிக்கின்-றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி வரதம்மாள், 75. கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே அரியனப்பள்ளி கிராமத்தில், தன் மகள் வீட்டில் கடந்-தாண்டு ஆக., முதல் தங்கியிருந்தார். கடந்தாண்டு நவ., 4 மாலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாய-மானார். அவரது மகள் தமிழரசி, 48, புகார் படி, வேப்பனஹள்ளி போலீசார் தேடி வருகின்றனர்.பர்கூர் அருகே நேரலக்கோட்டையை சேர்ந்தவர் விக்னேஷ், 23. கேட்டரிங் தொழில் செய்கிறார். கடந்த, 2ம் தேதி இரவு, 11:30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பவில்லை. அவரது தந்தை சென்னகேசவன், 49, புகார் படி, பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கும் சிருங்கேரி மடத்துக்கும் நெருங்கிய தொடர்பு
-
31.40 லட்சம் பேர் வேலை கேட்டு பதிவு
-
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தத்திற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
-
ரூ.23 லட்சம் செலுத்தினால் இந்தியர்களுக்கு கோல்டன் விசா
-
தமிழக மின் கட்டணம் மற்ற மாநிலங்களை விடக் குறைவா? 4 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்திருக்கு; பட்டியலிடும் தொழில் அமைப்புகள்
-
மணகாளி மாரியம்மன் ஆனி விழா