பெண்ணிடம் அத்துமீறல் இளைஞர்கள் 3 பேர் கைது
மதுரவாயல்:சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மூவரை, போலீசார் கைது செய்தனர்.
கோயம்பேடு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார். கடந்த 4ம் தேதி வேலைக்கு செல்ல, மதுரவாயல் கிருஷ்ணா நகர் வழியாக நடந்து சென்றார்.
அப்போது, பைக்கில் வந்த மூவரில் ஒருவர், அப்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு தப்பி சென்றனர். இது குறித்து விசாரித்த மதுரவாயல் போலீசார், தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் வைத்து விசாரித்தனர்.
இதில், நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த நவநீதன், 19, வீர சஞ்சய், 20, சரவணகுமார், 18, ஆகியோர் அத்துமீறலில் ஈடுபட்டது தெரிய வந்தது. மூவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பைக் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும்
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு