பெண் துாக்கிட்டு தற்கொலை

வியாசர்பாடி:வியாசர்பாடி, எஸ்.எம்.நகர் பிரதான சாலையைச் சேர்ந்தவர் தீபா, 38; தனியார் நிறுவன ஊழியர். இவரது கணவர் ஸ்ரீதர், ஏழு ஆண்டுகளுக்கு முன் துாக்கிட்டு உயிரிழந்தார்.

இதையடுத்து, தீபா தன் தாய் கோவிந்தம்மாளுடன் வசித்து வந்தார். இவரது மகள் வண்ணாரப்பேட்டையில் உள்ள மாமியார் வீட்டில் வளர்ந்து வருகிறார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தீபா, கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், தீபா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வியாசர்பாடி போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

Advertisement