துாயபாத்திமா அன்னை ஆலயத்தில் 52ம் ஆண்டு தேர்த்திருவிழா துவக்கம்
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி துாய பாத்திமா அன்னை திருத்தல ஆலயத்தில், 52ம் ஆண்டு தேர்த்திருவிழா நேற்று முன்தினம் மாலை கொடி-யேற்றத்துடன் துவங்கியது.
ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில், பெங்களூரு புனித பேதுருபாப்பிறை குருத்துவ
கல்லுாரி பேராசிரியர் சகாயராஜ், திருவிழா கொடியை ஏற்-றினார். இதில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக ஆலயத்தில் பங்குதந்தை அருள்ராஜ் முன்னிலையில், நவநாள் ஜெபம் மற்றும் கூட்டுத்திருப்பலி நடத்தப்பட்டது.
தொடர்ந்து, 9 நாட்கள் நடக்கும், இந்த தேர்த்திருவிழா நிறைவு-நாளின் போது, வாணவேடிக்கையுடன், பாத்திமா அன்னையின் தேர் பவனி கிருஷ்ணகிரி நகர வீதிகளில் உலா வர உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு
Advertisement
Advertisement