பெண்ணை தாக்கி கார் கண்ணாடியை உடைத்தவர் கைது

சேலம்: சேலம், சிவதாபுரம் செட்டியம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி பிரேமா, 40. இவரது பக்கத்து வீட்டை சேர்ந்-தவர் மணிகண்டன்.


இவர்கள் இடையே வழித்தடம் தொடர்பாக பிரச்னை இருந்தது. கடந்த, 4ல் பிரேமா, அவரது காரை ஓட்டி வந்து, வீடு அருகே நிறுத்தியுள்ளார். அப்போது மணிகண்டன், அவரது தந்தை கந்த-சாமி ஆகியோர், கார் நிறுத்தியது குறித்து கேட்டு பிரேமாவிடம் வாக்குவாதம் செய்தனர். தொடர்ந்து பிரேமாவை தாக்கி, கார் கண்ணாடியை கட்டையால் அடித்து நொறுக்கினர். இதுகுறித்து பிரேமா புகார்படி, இரும்பாலை போலீசார், மணிகண்டனை நேற்று முன்தினம் கைது செய்து, கந்தசாமியை தேடுகின்றனர்.

Advertisement