குளித்தலை அரசு கலை கல்லுாரியில் இளநிலை பாடங்களுக்கு நேரடி சேர்க்கை
குளித்தலை: குளித்தலை அரசு கலை கல்லுாரியில், இளநிலை பாட பிரிவு-களுக்கான நேரடி சேர்க்கை நடக்கிறது என, கல்லுாரி முதல்வர் சுஜாதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
குளித்தலை அரசு கலை கல்லுாரியில், 2025-26ம் கல்வியாண்டிற்-கான இளநிலை பாட பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை, மதிப்பெண் மற்றும் இன சுழற்சி அடிப்படையில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில், காலியாக உள்ள அனைத்து பாடப்பிரி-வுகளுக்கும் நேரடி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பிளஸ் 2 முடித்து, இதுவரை கல்லுாரியில் சேராத மாணவர்கள் மற்றும் விண்ணப்பிக்காதவர்கள் நேரடியாக கல்லுாரியில் செயல்பட்டு வரும் மாணவர் சேவை மையத்திற்கு வருகைபுரிந்து விண்ணப்-பித்து காலியாக உள்ள இளநிலை பாடப்பிரிவுகளில் நேரடியாக வந்து சேர்ந்து பயனடையலாம். மேலும், வெளியூர் மற்றும் வெளிமாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவியருக்கு தனித்தனி இலவச விடுதி வசதியும் உள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும்
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு