சைபர் குற்ற தடுப்பு விழிப்புணர்வு மாரத்தான்
நாமக்கல்: நாமக்கல்லில், சைபர் குற்றங்களை தடுக்கவும், பெண்களிடம் அவசர கால எண், '1930' குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், மாரத்தான் போட்டி நேற்று காலை நடந்தது. நாமக்கல்-சேலம் சாலையில், தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்கம் முதல் முத-லைப்பட்டி வரை, 6 கி.மீ., தொலைவு, முருகன் கோவில் வரை, 3 கி.மீ., தொலைவு, பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் வரை, 2 கி.மீ., தொலைவு என்ற வகையில், மூன்று வகையான போட்டிகள் நடந்தன.
இதில், நாமக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவ, மாணவியர், 1,200 பேர் ஆர்வமுடன் பங்கேற்றனர். இப்-போட்டியை, நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி., ராஜேஷ்-கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சைபர் குற்றத்தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., விஜயராகவன், மினிஸ்டர் ஒயிட் நிறுவன பொதுமேலாளர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இப்போட்டியில், 6, 3, 2 கி.மீ., பிரிவுகளில் முதலிடம் பெற்ற ஆண், பெண், தலா, இருவருக்கும், 8,000 ரூபாய் மதிப்பிலான நவீன மிதிவண்டியும், இரண்டாம் பரிசாக, 20 கிராம் வெள்ளிக்கா-சுகளும், மூன்றாம் பரிசாக கைக்கடிகாரமும் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை போலீசார், தனியார் நிறுவனத்தினர் செய்திருந்தனர்.
மேலும்
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு