மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடத்தில் தொழிற்பேட்டை துவங்க கோரிக்கை
நாமக்கல்: 'நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடத்தில், லாரி பாடி பில்டிங் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும்' என, விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல், வேலகவுண்டம்பட்டி அடுத்த முசிறி கிராமத்தில், நாமக்கல் மாவட்ட கனரக வாகனங்கள் பாடி கட்டுமான தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (கிளஸ்டர்) தொடங்குவதற்காக, 10 ஆண்டுகளுக்கு முன், தமிழக அரசால் நிலம் கையகப்படுத்தப்-பட்டது. தொடர்ந்து, அங்கு லாரி பில்டிங் தொழில்பேட்டை அமைப்பதற்கான, அடிப்படை வசதிகள் செய்து தருவதற்காக, மேல்நிலை நீர்தேக்க தொட்டி, தார்ச்சாலை, கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. இதன்மூலம், தமிழக அரசு சார்பில், பல-கோடி ரூபாய் செலவிடப்பட்டது.
இதையடுத்து, அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இது-வரை அங்கு எந்தவிதமான தொழில் நிறுவனங்களும் வர-வில்லை. இந்நிலையில், சில நாட்களுக்கு முன், எம்.பி., மாதேஸ்-வரன், தமிழக தொழில்துறை அமைச்சரை சந்தித்து, நாமக்கல்லில் லாரி தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.
முசிறி பஞ்சாயத்தில் உள்ள இடம் எந்த விதமான பயன்பாடும் இல்லாமல் காலியாக உள்ளதால், அந்த இடத்தில் உடனடியாக கலெக்டர் ஆய்வு செய்து, அங்கு லாரி தொழில் பூங்கா அமைப்ப-தற்கு தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும்.
மேலும், இதுபோன்ற பல இடங்கள், நாமக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே தொழிற்பேட்டை என அறிவிக்கப்பட்டு, எந்த வித-மான பயன்பாடும் இல்லாமல் காலி நிலமாக கிடக்கின்றன. அதனால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட இடங்களில், தொழிற்-பேட்டை துவங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து, புதிதாக சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதாக கூறி விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை கைவிட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு