கிளை நுாலகம் திறப்பு

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை அடுத்த சீராப்பள்ளி டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2 கோடியே, 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலை, சிமென்ட் சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜேஸ்குமார் எம்.பி., அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து முடிவுற்ற பணிகளான மாவட்ட நுாலக ஆணைக்குழு திட்டத்தின் கீழ், 36.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கிளை நுாலக கட்டடம் மற்றும் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ், 28 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதி-தாக கட்டப்பட்ட சிறுவர் விளையாட்டு பூங்காவை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். சீராப்பள்ளி டவுன் பஞ்., தலைவர் லோகாம்பாள், துணைத்தலைவர் செல்வராஜ் மற்றும் கட்சி நிர்-வாகிகள் கலந்துகொண்டனர்.

Advertisement