'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில் 238 முகாம்: மக்கள் பயன்-பெற அழைப்பு
நாமக்கல்: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், மாவட்டத்தில், 238 சிறப்பு முகாம் நடக்கிறது என, நாமக்கல் கலெக்டர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில், 238 சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இந்த முகாம், வரும், 15ல், தொடங்கி, 40 நாட்கள் நடக்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசு துறைகளின் சேவைகள், திட்டங்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்கே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ், தன்னார்வலர்கள் ஒவ்வொரு வீட்-டிற்கும் நேரடியாக சென்று முகாம் நடக்கும் நாள், இடம் குறித்த விபரங்கள், அங்கு வழங்கப்பட உள்ள பல்வேறு அரசு துறை-களின் திட்டங்கள் மற்றும் சேவைகளை விவரித்து, அவற்றில் பயன் அடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து தெரிவிப்பதோடு, தகவல் கையேட்டையும் வழங்க உள்-ளனர். மேலும், இந்த முகாம்களில், 'மகளிர் உரிமைத்தொகை' பெற தகுதி உள்ள, விடுபட்ட மகளிர் யாராவது இருந்தால், முகாம் நடக்கும் நாள் அன்று முகாமிற்கு சென்று, தங்கள் விண்ணப்-பத்தை அளிக்கலாம். 'மகளிர் உரிமை தொகை' திட்டத்திற்கான விண்ணப்பம், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இத்திட்டம் குறித்த விபரங்களை, பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக தன்னார்வலர்கள் மூலம் வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி நாளை முதல் தொடங்குகிறது. இந்த பணி, 3 மாதங்கள் தொடர்ச்சியாக நடக்கிறது. 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
ரபேல் போர் விமானம் குறித்து அவதூறு; சீனாவின் குள்ளநரித்தனம்
-
மத்திய பழங்குடியின நல அமைச்சர் கோவை ஈஷா மையம் வருகை; வியக்க வைத்த வெளிநாட்டு இனங்கள்
-
அதிபர் டிரம்புக்கு எதிராக கட்சி துவங்கினார் எலான் மஸ்க்
-
அமெரிக்காவில் 3வது கட்சியை தொடங்குவது அபத்தம்; டிரம்ப் விமர்சனம்
-
அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் சீன அதிபர்
-
வளரும் நாடுகள் இல்லாத அமைப்பு சிம் இல்லாத மொபைல் போன்றவை: பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு