திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

1

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற இக்கோவிலில் மூர்த்தி, தீர்த்தம், தல விருட்சம் ஆகியன மூன்றாக அமைந்துள்ளது.


நவகிரகங்கள் புதன் பகவான், சிவனின் 64 மூர்த்தி பேதங்களும் ஒன்றான அகோர மூர்த்தி ஆகியோர் தனி சன்னதிகள் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். காசிக்கு சமமான 6 தலங்களில் முதன்மையான தளமாகவும், சக்தி பீடங்களில் 51வது பீடமாகவும் திகழ்கிறது. இத்தகைய சிறப்பு மிக்க கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த 2016ம் ஆண்டு நடந்தது.


9 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தமிழக அரசு ரூ. 2 கோடியே 5 லட்சம் நிதி, நன்கொடையாளர்கள் அளித்த ரூ 25 கோடி நிதி ஆகியவற்றை கொண்டு திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. இன்று திங்கட்கிழமை துவாதசி திதி அனுசு நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் காலை 9:05 மணிக்கு சிம்ம லக்கனத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், மயிலாடுதுறை எம்.பி., சுதா, எம்.எல்.ஏ.,க்கள் மயிலாடுதுறை ராஜகுமார். பூம்புகார் நிவேதா எம்.முருகன், சீர்காழி பன்னீர்செல்வம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Advertisement