54 அடி உயர சிவன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா வழுவூர் அருகே பெருஞ்சேரி கிராமம் அமைந்துள்ளது. புராண காலத்தில் தாருகாவனம் என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த இடத்தில் 48000 ரிஷிகள் தவம் புரிந்து வந்தனர்.
இந்த நவீன ஆலயத்தின் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த நான்காம் தேதி காவேரி ஆற்றின் கிளை நதியான வீரசோழன் ஆற்றில் இருந்து புனித நீர் யானைகள் மேல் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு யாகசாலையில் வைத்து புனித வேள்விகள் நடைபெற்றன.
இன்று யாகசால பூஜைகள் நிறைவடைந்த நிலையில், மங்கள வாத்தியங்கள் மற்றும் சிவவாத்தியங்கள் முழங்க, 54 அடி உயர சிவன் வடிவ ஆலயத்தின் மேல் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து மலர்கள் தூவி சுவாமிக்கு மகா அர்ச்சனை நடைபெற்றது. இதனையடுத்து மூலவர் ஒரே கல்லினால் செய்யப்பட்ட லிங்கத் திருமேணிக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் வெளிநாட்டில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று நமச்சிவாய மந்திரத்தை ஓதி வழிபாடு செய்தனர்.
மேலும்
-
இ.பி.எஸ். கூட்டத்தில் அ.தி.மு.க.,வினரிடம் ரூ.2 லட்சம் பிக்பாக்கெட்
-
கடலில் சிக்கிய 4 இந்திய மீனவர்களை மீட்டது இலங்கை கடற்படை
-
டில்லியில் சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை; வங்கதேசத்தினர் 18 பேர் கைது
-
அஜித்குமார் மரண வழக்கு: த.வெ.க. போராட்டம் நடத்த போலீஸ் அனுமதி
-
அதிகாலை பயணத்தில் மரத்தில் மோதி கார் விபத்து: ம.பி.,யில் 3 பெண்கள் பலி;15 பேர் காயம்
-
உலகின் கவனத்தை திருப்பிய இந்திய பாதுகாப்புத்துறை ; ராஜ்நாத்சிங் பெருமிதம்