இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை; வரி விதிப்பது குறித்து டிரம்புக்கு புத்திமதி சொல்கிறது சீனா!

6


பீஜிங்: ''நாங்கள் மோதலை விரும்பவில்லை. இது போன்ற நடவடிக்கைகள் பயனற்றவை'' என டிரம்பின் வரி விதிப்பு மிரட்டலுக்கு சீனா பதில் அளித்துள்ளது.


பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்ரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு 10 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்து, சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரிக்ஸ் அமைப்பு நாடுகளுக்கு கூடுதல் வரி விதிப்பு நடவடிக்கைள் பயனற்றவை. எந்த ஆக்கபூர்வமான நோக்கத்திற்கும் உதவாது. நாங்கள் மோதலை விரும்பவில்லை. பிரிக்ஸ் அமைப்பு ஒத்துழைப்பு மற்றும் உலக வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது.



மோதல் மற்றும் புவிசார் அரசியலை நிராகரிக்கிறது. அரசியல் வற்புறுத்தலுக்கான கருவியாக வரிகளை பயன்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம். வரி விதிப்பு நடவடிக்கைகள் எந்த பலனையும் அளிக்காது. அரசியல் அழுத்தம் கொடுக்க வரி விதிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement