பஞ்சாபில் பஸ் கவிழ்ந்து பயங்கர விபத்து; 8 பேர் பரிதாப பலி: 30 பேர் காயம்

சண்டிகர்: பஞ்சாபில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.
பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் மாவட்டம் ஹாஜிபூர் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பஸ், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது. தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உள்ளூர் மக்களின் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.
இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. முதற்கட்ட விசாரணையில் பஸ்ஸை அதிவேகமாக இயக்கியதால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது என்பது தெரியவந்துள்ளது. பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


மேலும்
-
அரசு பங்களாவை காலி செய்யாத விவகாரம்: மூட்டை கட்டி விட்டேன் என்கிறார் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்
-
சட்டசபை தேர்தல் பிரசாரம்: மேட்டுப்பாளையத்தில் துவக்கினார் இ.பி.எஸ்.,
-
ஆணைகள் செயலாக்கம் பெறவேண்டும் என்பது தான் திராவிட மாடல்: முதல்வர் ஸ்டாலின்
-
கட்டுவிரியன் தீண்டி சுயநினைவற்ற நிலையில் வந்த சிறுவன்:10 நாள் சிகிச்சையில் குணமாக்கிய அரசு டாக்டர்கள்
-
வேளாண் பல்கலை டிப்ளமோ தரவரிசை வெளியீடு
-
இஸ்ரோ குழுவுக்கு நன்றி: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நாராயணனுடன் சுபான்ஷூ சுக்லா உரையாடல்!