அதிகாலை பயணத்தில் மரத்தில் மோதி கார் விபத்து: ம.பி.,யில் 3 பெண்கள் பலி;15 பேர் காயம்

ஷஹ்தோல்: ம.பி., மாநிலத்தில் இன்று அதிகாலை மரத்தில் மோதி கார் விபத்துக்குள்ளானதில் 3 பெண்கள் பலியானார்கள். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
மத்திய பிரதேச மாநிலம் ஷஹ்தோல் மாவட்டத்தில் இன்று அதிகாலை பயணத்தின் போது எம்.யு.வி., கார், கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி விபத்துக்குள்ளாதாக, போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.
இது குறித்து பியோஹரி போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பாளர் அருண் பாண்டே கூறியதாவது:
தகவல் அறிந்து விபத்து நடந்த இடத்திற்கு சென்றோம். விபத்துக்குள்ளான எம்.யு.வி., கார் சத்தீஸ்கர் மாநில பதிவுபெற்ற வாகனம் என அடையாளம் காணப்பட்டது.
அந்த காரில் 20 பேர் பயணித்துள்ளனர். அவர்களில் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
காரில் பயணித்தவர்கள் உ.பி., மாநிலம் அயோத்தி சென்றுவிட்டு சத்தீஸ்கர் திரும்பி வரும்போது இந்த விபத்து நடந்திருக்கிறது.
விபத்தில் உயிரிழந்தவர்கள், காயத்ரி கவார், மாலதி படேல் மற்றும் இந்திரா பாய் என அடையாளம் காணப்பட்டனர். 15 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அம்புலன்ஸ் மற்றும் போலீஸ் வாகனங்களில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு விபத்து குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்து குறித்து விரிவான விசாரணை நடக்கிறது.
இவ்வாறு அருண் பாண்டே கூறினார்.
நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது. வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும்
-
மீண்டும் பறக்குமா பிரிட்டன் போர் விமானம்; பழுது சரி பார்க்கும் பணி துவக்கம்!
-
சமூக வலைதள பதிவுக்காக சிறையில் அடைப்பதா: மாஜிஸ்திரேட்களுக்கு ஆந்திரா உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
-
நயன்தாரா ஆவணப்படத்தில் 'சந்திரமுகி' காட்சிகள்: நஷ்டஈடு கோரி மேலும் ஒரு வழக்கு
-
டெக்சாஸ் கனமழை, வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு: பேரிடராக அறிவித்த டிரம்ப்
-
பஞ்சாபில் பஸ் கவிழ்ந்து பயங்கர விபத்து; 8 பேர் பரிதாப பலி: 30 பேர் காயம்
-
இ.பி.எஸ். கூட்டத்தில் அ.தி.மு.க.,வினரிடம் ரூ.2 லட்சம் பிக்பாக்கெட்