டில்லியில் சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை; வங்கதேசத்தினர் 18 பேர் கைது

புதுடில்லி: டில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த, வங்கதேசத்தினர் 18 பேர் உட்பட வெளிநாட்டினர் 29 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டில்லியில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் வங்கதேசத்தினரை கண்டுபிடித்து வெளியேற்றும் நடவடிக்கை தீவிரமாக நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு பகுதியில் போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் வீடு வீடாக சோதனை நடத்தினர். அப்போது வங்க தேசத்தினர் போலி ஆவணங்களை பயன்படுத்தி வசித்து வருவதை போலீசார் கண்டறிந்தனர்.
சந்தேகத்திற்குரிய நபர்களிடம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். ஆனால் அவர்கள் போலீசாரை குழப்பும் வகையில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.
இவ்வாறு பிடிபட்ட வங்கதேசத்தினர் 18 பேர் உட்பட 29 வெளிநாட்டினரை போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்டு உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




மேலும்
-
அரசு பங்களாவை காலி செய்யாத விவகாரம்: மூட்டை கட்டி விட்டேன் என்கிறார் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்
-
சட்டசபை தேர்தல் பிரசாரம்: மேட்டுப்பாளையத்தில் துவக்கினார் இ.பி.எஸ்.,
-
ஆணைகள் செயலாக்கம் பெறவேண்டும் என்பது தான் திராவிட மாடல்: முதல்வர் ஸ்டாலின்
-
கட்டுவிரியன் தீண்டி சுயநினைவற்ற நிலையில் வந்த சிறுவன்:10 நாள் சிகிச்சையில் குணமாக்கிய அரசு டாக்டர்கள்
-
வேளாண் பல்கலை டிப்ளமோ தரவரிசை வெளியீடு
-
இஸ்ரோ குழுவுக்கு நன்றி: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நாராயணனுடன் சுபான்ஷூ சுக்லா உரையாடல்!