கடலில் சிக்கிய 4 இந்திய மீனவர்களை மீட்டது இலங்கை கடற்படை

கொழும்பு: மேற்கு கடற்கரையில் மீன் பிடிக்க சென்று காணாமல் போன 4 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை பத்திரமாக மீட்டுள்ளது.
கடந்த ஜூன் 29ம் தேதி அன்று, இந்திய மீனவர்கள் 4 பேர் மீன் பிடிக்கச்சென்றனர். அப்போது மோசமான வானிலை காரணமாக, இந்திய மீனவர்கள் கடலில் சிக்கி, அனைத்து தொடர்பு இணைப்புகளையும் இழந்தனர்.
இதனை தொடர்ந்து மும்பை கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம், இலங்கை கடற்படைக்கு தெரிவித்த நிலையில், இலங்கை கடற்படையின் ஒருங்கிணைந்த தேடல் மற்றும் மீட்பு பணியால் நேற்று 4 மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
இது தொடர்பாக இலங்கை கடற்படை வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை:
மீட்கப்பட்ட 4 மீனவர்களும் டிகோவிட்டா துறைமுகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டனர், அங்கு அவர்களுக்கு இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை தேவையான அத்தியாவசிய உதவிகளை செய்தது.
கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் உடன் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில், இரண்டு வாரங்களில், 2வது முறையாக இந்திய மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து மீனவர்கள் 4 பேரும் மேற்கொண்டு நடவடிக்கைகளுக்காக வத்தளை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்கப்பட்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மேலும்
-
அரசு பங்களாவை காலி செய்யாத விவகாரம்: மூட்டை கட்டி விட்டேன் என்கிறார் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட்
-
சட்டசபை தேர்தல் பிரசாரம்: மேட்டுப்பாளையத்தில் துவக்கினார் இ.பி.எஸ்.,
-
ஆணைகள் செயலாக்கம் பெறவேண்டும் என்பது தான் திராவிட மாடல்: முதல்வர் ஸ்டாலின்
-
கட்டுவிரியன் தீண்டி சுயநினைவற்ற நிலையில் வந்த சிறுவன்:10 நாள் சிகிச்சையில் குணமாக்கிய அரசு டாக்டர்கள்
-
வேளாண் பல்கலை டிப்ளமோ தரவரிசை வெளியீடு
-
இஸ்ரோ குழுவுக்கு நன்றி: சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து நாராயணனுடன் சுபான்ஷூ சுக்லா உரையாடல்!