குடியிருப்பில் தெரு விளக்கு சேதத்தால் காவலர்கள் அவதி
கரூர், கரூர் அருகே, காவலர் குடியிருப்பில் உள்ள மின் விளக்குகள் சேதமடைந்து எரியாததால், காவலர் குடும்பத்தினர் அவதிப்படுகின்றனர்.
கரூர்-ஈரோடு சாலை வடிவேல் நகரில், 150க்கும் மேற்பட்ட காவலர் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதில் கரூர் டவுன் டி.எஸ்.பி., வீடு, அலுவலகம் மற்றும் இன்ஸ்பெக்டர் முதல் காவலர்களுக்கான அடுக்கு மாடி வீடுகள் உள்ளன. அதில் காவலர் குடும்பத்தினர், 500க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகளுடன் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் குடியிருப்புகளில் உள்ள, மின் கம்பங்களில் விளக்குகள் சேதமடைந்துள்ளது. விளக்குகள் எரியாததால், இரவு நேரத்தில் காவலர் குடும்பத்தினர் அவதிப்படுகின்றனர்.
மேலும் அப்பகுதியில், பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் இரவு நேரத்தில் உலா வருகிறது. எனவே, காவலர் குடியிருப்புகளில் சேதமடைந்துள்ள விளக்குகளை மாற்ற, கரூர் மாவட்ட காவல் துறை நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.
மேலும்
-
பேராசிரியர்கள் காலி பணியிடம் அமைச்சர் செழியன் தகவல்
-
234 தொகுதிகளிலும் போட்டியிட தயார்: இ.கம்யூ.,
-
மதுரை மண்டல தலைவர்களிடம் ராஜினாமா கடிதம் பெற்ற அமைச்சர்; மாநகராட்சி முறைகேடு விவகாரத்தில் திருப்பம்
-
தி.மு.க., எதிர்ப்பு ஓட்டு த.வெ.க.,வுக்கு வரும்
-
இருட்டிலும், இக்கட்டிலும் மாட்டி கொண்டிருப்பவர் பழனிசாமி: தி.மு.க.,
-
இரண்டு மாங்காய் ஆகிவிட்டது பா.ம.க.,