இரண்டு மாங்காய் ஆகிவிட்டது பா.ம.க.,

'நடப்போம் நலம் பெறுவோம்' திட்டத்தை, அமைச்சர் சுப்பிரமணியன், தர்மபுரி கலெக்டர் பங்களா அருகே மக்கள் பயன்பாட்டிற்கு துவங்கி வைத்திருந்தார்.

அதன்படி, தினமும் அதில் நடந்து சென்று, மக்களை சந்தித்து வருகிறார், தர்மபுரி, பா.ம.க.,- - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன்.

இத்திட்டத்தை அவர் சரியாக பயன்படுத்தி வருகிறார். இதை தான், 'ஒரே கல்லில் இரண்டு மாங்காய்' என்பர். பா.ம.க.,வும் தற்போது இரண்டு மாங்காய் ஆகிவிட்டது.

எங்கள் கட்சியின் முன்னாள் தர்மபுரி, எம்.எல்.ஏ., தடங்கம் சுப்பிரமணியை நடந்து சென்று, மக்களை சந்திக்க சொன்னேன். அவர் கேட்கவில்லை.

- பன்னீர்செல்வம்

வேளாண்மை துறை அமைச்சர், தி.மு.க.,

Advertisement