இருட்டிலும், இக்கட்டிலும் மாட்டி கொண்டிருப்பவர் பழனிசாமி: தி.மு.க.,

1

வேலுார் : ''இருட்டிலும், இக்கட்டிலும் மாட்டி கொண்டிருப்பது, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி,'' என, அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

வேலுார் மாவட்டம், காட்பாடி அடுத்த தாராபடவேடில் நேற்று நடந்த, தி.மு.க,, பூத் முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், பின் நிருபர்களை சந்தித்தார்.

கேள்வி: முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறந்து விட்டும் கால்வாய்கள் துார்வாரப் படாததால் கடைமடை வரை தண்ணீர் செல்லவில்லை என, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளாரே.

அமைச்சர் துரைமுருகன்: அவருக்கு என்ன தெரியும். எல்லா இடத்துக்கும் தண்ணி போயாச்சு. எதிர்க்கட்சி தலைவர் எங்களை பாராட்டிக் கொண்டா இருப்பார். சந்தேகம் இருந்தா, அவரைப் போய் பார்க்கச் சொல்லுங்க.

கேள்வி: இருளை அகற்றி, தமிழகத்தை ஒளி வீசச்செய்வதே என் தீராத ஆசை என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியுள்ளாரே.

அமைச்சர் துரைமுருகன்: இருட்டில் மாட்டிக் கொண்டிருப்பது, இக்கட்டில் மாட்டிக் கொண்டிருப்பது இரண்டுமே பழனிசாமி தான்.

இவ்வாறு பதிலளித்தார்.

Advertisement