பேராசிரியர்கள் காலி பணியிடம் அமைச்சர் செழியன் தகவல்
சென்னை : 'கல்லுாரி பேராசிரியர்கள் நியமனம் மற்றும் முதல்வர்கள் பதவி உயர்வு தொடர்பாக, அரசு முறையான நடவடிக்கை எடுத்து வருகிறது' என, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழகத்தில், உள்ள கல்லுாரிகளுக்கு அனுமதிக்கப்பட்ட பேராசிரியர் பணியிடங்கள், நிரப்பப்பட்ட முதல்வர்கள் குறித்து, தவறான செய்திகள் வெளியாகி உள்ளன.
கலை அறிவியல் கல்லுாரிகளில், 1,500 பேராசிரியர்கள் மட்டும் இருப்பதாக செய்தி வந்துள்ளது. ஆனால், 4,711 பேராசிரியர்கள் நிரந்தரமாகப் பணியாற்றி வருகின்றனர்.
பேராசிரியர் காலியிடங்களில், கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டு, மாணவர்களின் கல்வி பாதிக்காமல் இருக்க, ஏற்பாடு செய்யப்பட்டுஉள்ளது.
பல்வேறு வழக்குகள் காரணமாக, உதவிப் பேராசிரியர்கள் நியமனத்தில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. காலியிடங்களை நிரப்ப, சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கல்லுாரி முதல்வர்கள் நியமனம் தொடர்பாகவும், வழக்கு நிலுவையில் உள்ளது. அதை முடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது முதல்வர் பணியிடம் காலியாக உள்ள கல்லுாரிகளில், மூத்த பேராசிரியர்கள் முதல்வர்களாக முழு கூடுதல் பொறுப்பில் நியமிக்கப்பட்டு, சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
வழக்கு முடிவுக்கு வந்ததும், காலியாக உள்ள கல்லுாரிகளில், முதல்வர்கள் பணி அமர்த்தப்படுவர்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர்
-
திருவள்ளூர் புகார் பெட்டி