அரவக்குறிச்சி வேளாண் துறை சார்பில் கிராமிய கலை நிகழ்ச்சி
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறை சார்பில், ஆத்மா திட்டத்தின் கீழ் கொடையூர் மற்றும் வெஞ்சமாங்கூடலுார் கிழக்கு ஒன்றிய கிராமத்தில், விவசாயிகளுக்காக வேளாண்மை துறை சார்ந்த கிராமிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
வேளாண்மை தொடர்பான திட்டங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்த நிகழ்ச்சியில், பாரம்பரிய கலை வடிவங்களான நாட்டுப்புற பாடல்கள், நடனங்கள், நாடகங்கள் மற்றும் பொம்மலாட்டம் போன்றவற்றை பயன்படுத்தி, விவசாயிகளுக்கு எளிதில் புரியும் வகையில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் மானியங்கள், நவீன சாகுபடி முறைகள், பயிர் பாதுகாப்பு முறைகள் மற்றும் சந்தை வாய்ப்புகள் குறித்து எடுத்து கூறப்பட்டது.
விவசாயிகளுக்கு மண் மாதிரி சேகரிக்கும் முறைகள், தனி அடையாள எண் பெறாத விவசாயிகள் பெற்று கொள்ளும் விதமாக ஒரு சிறிய நாடக நிகழ்வு, மேலும் பி.எம்., கிஷான், நுண்ணீர் பாசனம், இயற்கை உரம் பயன்படுத்துதல் குறித்த விளக்கங்கள் மற்றும் துறை சார்ந்த திட்டங்கள் குறித்து கலை நிகழ்ச்சி மூலம் நடத்தப்பட்டது.
மேலும்
-
சந்திரமதி அரிச்சந்திர கோவில் கும்பாபிேஷகம்
-
கோவில் திருப்பணிக்கு மாஜி எம்.எல்.ஏ., நிதியுதவி
-
கட்டண உயர்வு அறிக்கை மெட்ரோவுக்கு நோட்டீஸ்
-
அமைச்சர்கள் மீது புகார் மடல்: கண்டுகொள்ளாத பொறுப்பாளர்
-
காவிரி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்
-
ஜிப்மரில் வேலை வாங்கி தருவதாக மோசடி நான்கு பேர் மீது வழக்கு பதிவு