அமைச்சர்கள் மீது புகார் மடல்: கண்டுகொள்ளாத பொறுப்பாளர்
பெங்களூரு : கர்நாடகாவின் ஐந்து மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன், மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர்கள் மீது சில எம்.எல்.ஏ.,க்கள் புகார் கூறியும், மேலிட பொறுப்பாளர் கண்டுகொள்ளவில்லை.
கர்நாடக காங்கிரசில் உட்கட்சி பிரச்னை அதிகரித்து உள்ளது. முதல்வர் பதவி குறித்து சித்தராமையா, சிவகுமார் ஆதரவாளர்கள் பகிரங்கமாக பேசி வருவது, மேலிடத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தியது. சில எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் தொகுதிக்கு நிதி கிடைக்கவில்லை என்று வெளிப்படையாக கூறினர்.
அதிருப்தி எம்.எல்.ஏ.,க்களை சமாதானம் செய்ய, கடந்த வாரம் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூரு வந்தார். பழைய மைசூரு பகுதி எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அவர்களின் செயல்பாடுகள் பற்றி கேட்டறிந்தார். மூன்று நாட்கள் 45 எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்கள் கூறிய கருத்துடன் டில்லி சென்றார்.
இந்நிலையில் வடமாவட்ட எம்.எல்.ஏ.,க்கள் குறைகளை கேட்டு அவர்களுடன் ஆலோசனை நடத்த, பெங்களூருக்கு நேற்று மீண்டும் வந்தார். நேற்று காலை 10 மணி முதல் மாலை 5:00 மணி வரை பெலகாவி, பாகல்கோட், விஜயபுரா, கலபுரகி, பல்லாரி மாவட்ட எம்.எல்.ஏ.,க்களுடன் தனிதனியாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது பெலகாவி மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள், 'அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, லட்சுமி ஹெப்பால்கர் இடையில் நிலவும் பனிப்போரால் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகளுக்கு தடை ஏற்படுகிறது.
அவர்களுக்கு இடையில் உள்ள சண்டையை முடிவுக்கு கொண்டு வராவிட்டால், பெலகாவியில் கட்சி அமைப்பு பாதிக்கப்படும்' என்று, தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தினர்.
மேலிட பொறுப்பாளரை சந்தித்த அனைத்து எம்.எல்.ஏ.,க்களும், ஆளுக்கு ஒரு அமைச்சர் மீது புகார் மடல் வாசித்து உள்ளனர். இது எதையும் கண்டுகொள்ளாத மேலிட பொறுப்பாளர், 'உங்கள் பிரச்னை எதுவாக இருந்தாலும் என்னிடம் கூறுங்கள். வெளிப்படையாக எதுவும் பேசாதீர்கள். அப்படி செய்வது எதிர்க்கட்சிகளுக்கு தான் பிளஸ் ஆக மாறும்' என்று, அறிவுரை கூறி அனுப்பி வைத்து உள்ளார்.
மேலும்
-
கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர்
-
திருவள்ளூர் புகார் பெட்டி