ஏரியில் செத்து மிதக்கும் மீன்களால் துர்நாற்றம்



ஊத்தங்கரை, ஊத்தங்கரை பரசனேரியில் கழிவுநீர் கலப்பதால், தண்ணீர் மாசடைந்து, தற்போது ஏரியில் இருந்த மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் இருந்து திருப்பத்துார் செல்லும் சாலையில், துர்நாற்றம் வீசி வருகிறது.

மேலும் நோய் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த அப்பகுதி மக்கள், ஊத்தங்கரை டவுன் பஞ்., நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement