விதிமுறை மீறும் வாகன ஓட்டிகள் மீது 'கரிசனம்'
தவறுக்கு துணைபோகும் போலீசார் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நேர்மையான போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
விழுப்புரம் நகரில் போக்குவரத்து போலீசார், சில மாதங்களாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில போலீசார் போக்குவரத்து விதிமுறைகளை தீவிரமாக கடைபிடிக்கின்றனர்.
ஓவர் ஸ்பீடு, ெஹல்மெட் அணியாதது, சீட்பெல்ட் அணியாதது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட குற்றங்களுக்காக வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கின்றனர்.
மேலும், புறவழிச் சாலையில், இரவு நேர வாகன சோதனையின்போது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வதுடன் வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. பின், ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டபின் உரிமையாளரிடம் வாகனம் ஒப்படைக்கப்படுகிறது.
இதில், ஒரு சில போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டிகளின் பரிதாப நிலையை கண்டு மனமிறங்கி, அதிரடி ஆபர் தருகின்றனர்.
அதாவது, ஆவணங்கள் எதுவுமே தேவையில்லை. பணமாக 2,500 ரூபாய் கொடுத்தால் போதும். உடனடியாக வாகனத்தை விடுவித்து விடுகின்றனர். மதுபோதையில் உள்ள குடிமகன்கள் பலரும், 'வழக்கு தேவையில்லை, அபராதமும் தேவையில்லை' என அன்பளிப்பை கொடுத்துவிட்டு, ஓட்டம் பிடிக்கின்றனர்.
வாகன சோதனைகளில், தவறுக்கு துணைபோகும் போலீசார் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென நேர்மையான போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது செக்ஸ் புகார்
-
முதல்முறையாக விமானத்தில் பறந்த அரசு பள்ளி மாணவியர்: கனவு நிறைவேறியதாக உற்சாகம்
-
விழுப்புரம்-புதுச்சேரி பாசஞ்சர் ரயில் 10ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ரத்து
-
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை முயற்சி
-
அமெரிக்கா டெக்ஸாசில் மழை வெள்ளம்; பலி எண்ணிக்கை 104 ஆக அதிகரிப்பு
-
கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை