மேல்மலையனுார் ஒன்றிய கூட்டம்

அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் நடந்த ஒன்றிய கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேல்மலையனுாரில் ஒன்றிய கூட்டம் நடந்தது. சேர்மன் கண்மணி தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் ஜெய்சங்கர், சீதாலட்சுமி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், மாதாந்திர வரவு, செலவு கணக்குகள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மேல்மலையனுார் ஒன்றியத்தில் முதலமைச்சர் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தில் 131 பயனாளிகளுக்கு 3 கோடியே 14 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிதி வழங்கிய முதல்வர் ஸ்டாலினுக்கும், பரிந்துரை செய்த மஸ்தான் எம்.எல்.ஏ.,வுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

மண்டல துணை தாசில்தார் உமாமகேஸ்வரி, மாவட்ட கவுன்சிலர் சாந்தி, கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், கலா, ஷாகின் அர்ஷத், துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

Advertisement