'செரோடோனின் சிண்ட்ரோம்' முதியவரை காப்பாற்றிய காவேரி மருத்துவமனை
சேலம், நரம்பு மண்டலத்தில், செரோடோனின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும், 'செரோடோனின் சிண்ட்ரோம்' என்ற அரிதான மற்றும் ஆபத்தான பிரச்னையை சரியான நேரத்தில் துல்லியமாக கண்டறிந்து, 60 வயது முதியவரின் உயிரை காவேரி மருத்துவமனை காப்பாற்றியது.
நோயாளி அதிக காய்ச்சல், மாறுபட்ட சுயநினைவு, மூச்சுத்திணறல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீரக செயலிழப்பு, குறைந்த ரத்த அழுத்தம் போன்றவையும் இருந்தன. ஆனால் நோயாளியின் வெப்பநிலை 107°F என்ற அளவிற்கு இருந்ததை கண்ட மருத்துவக்குழு, இவை சாதாரண செப்சிஸ் அறிகுறிகளைவிட வித்தியாசமாக இருக்கலாம் எனக்கருதி, குடும்பத்தினரிடம் கேட்ட போது, நோயாளி மனநல மருந்துகளை தொடர்ந்து எடுத்து வருவதாக தெரியவந்தது. உடனடியாக, செரோடோனின் நச்சு விளைவுகளை குறைக்கும் மருந்துகள், தீவிர குளிர்விப்பு சிகிச்சை மற்றும் பல்வேறு சிறப்பு சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
மருத்துவக்குழுவை வழி நடத்திய டாக்டர் வதன்பிரசன்னா, தீவிர சிகிச்சைநிபுணர் கூறியதாவது:
செப்சிஸ் நோயாளிகளுக்கு பொதுவாக காய்ச்சல் அதிகமாக இருந்தாலும், 107°F என்பது மிகுந்த அசாதாரணம். மேலும் அவர் மனநல மருந்துகளை எடுத்து வருவதை உறவினர்கள் தெரிவித்ததும், நாங்கள் செரோடோனின் சிண்ட்ரோம் என்று சந்தேகித்து பரிசோதனை செய்து, உடனடியாக சரியான சிகிச்சை அளிக்கப்பட்டன. தற்போது அவர் முழுமையாக நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார்,''என்றார்.
சிகிச்சையில் முக்கிய பங்கு வகித்த தீவிர சிகிச்சை நிபுணர்கள், அவசர மருத்துவ, பொது மருத்துவ, சிறுநீரக, நரம்பியல் நிபுணர்கள், பிசியோதெரபி மற்றும் சுவாச சிகிச்சை நிபுணர்களுக்கு காவேரி மருத்துவமனை பாராட்டு தெரிவித்துள்ளது.-
மேலும்
-
மதுரை மண்டல தலைவர்களிடம் ராஜினாமா கடிதம் பெற்ற அமைச்சர்; மாநகராட்சி முறைகேடு விவகாரத்தில் திருப்பம்
-
தி.மு.க., எதிர்ப்பு ஓட்டு த.வெ.க.,வுக்கு வரும்
-
இருட்டிலும், இக்கட்டிலும் மாட்டி கொண்டிருப்பவர் பழனிசாமி: தி.மு.க.,
-
இரண்டு மாங்காய் ஆகிவிட்டது பா.ம.க.,
-
'எங்களால பணி செய்ய முடியல' பொள்ளாச்சி நகராட்சியில் குமுறல்
-
துப்பாக்கிச்சூடு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? மா., கம்யூ., கேள்வி