துப்பாக்கிச்சூடு அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? மா., கம்யூ., கேள்வி
திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில், போலீஸ் விசாரணையில் கொல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமாருக்கு நியாயம் கேட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில், கட்சியின் மாநில செயலர் சண்முகம் பேசியதாவது:
தமிழகத்தில் தினமும் நுாற்றுக்கணக்கான நகை திருட்டுகள் நடக்கின்றன. புகார் கொடுத்த நிகிதா மீதே பல புகார்கள் உள்ளன.
ஆனால், அஜித்குமாரை காட்டுமிராண்டித்தனமாக அடித்துக் கொல்லும் அளவுக்கு காவல் துறைக்கு அழுத்தம் கொடுத்த மேலதிகாரி யார் என்ற கேள்விக்கு, இன்றுவரை பதில் இல்லை.
துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை அளித்தும், தி.மு.க., அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு காரணமான அதிகாரிகள், ஒருவர் மீது கூட நடவடிக்கை எடுக்கவில்லை. போலீஸ் ஏ.டி.ஜி.பி., ஜெயராம், தன் காரை அனுப்பி ஆள் கடத்தலுக்கு துணை போயிருக்கிறார். அவர் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர்
-
திருவள்ளூர் புகார் பெட்டி