குறைதீர் கூட்டத்தில் 320 மனுக்கள் ஏற்பு

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கந்தசாமி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. மகளிர் உரிமை தொகை, விதவைகள் உதவித்தொகை, கருணை அடிப்படை பணி, போலீஸ் நடவடிக்கை என்பது உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக, 320 மனுக்கள் பெறப்பட்டன. அந்தந்த துறை விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பெண் ஓட்டுனர்களுக்கான சொந்த ஆட்டோ, தொழில் முறை டாக்ஸி வாங்க, ஒரு பயனாளிக்கு தலா, 1 லட்சம் ரூபாய் அரசு மானியம், கட்டுமான பணியிடத்து விபத்தால் மரணமடைந்த கட்டுமான தொழிலாளி சிக்குமாதையன் குடும்பத்துக்கு, 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி, பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்களுக்கான வீட்டு வசதி திட்டத்தில் சொந்தமாக நிலம் வைத்துள்ள, 2 தொழிலாளர்களுக்கு வீடு கட்ட தலா, 4 லட்சம் ரூபாய் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

Advertisement