முதியவரை தாக்கி பணம் பறித்த இருவருக்கு காப்பு
பவானி, :மதுரை, திருமங்கலத்தை சேர்ந்தவர் முருகன், 65; ஈரோடு, கருங்கல்பாளையத்தில் தங்கி, ஊர் ஊராகச் சென்று, தலையில் பாத்திரம் சுமந்து வியாபாரம் செய்து வருகிறார். ஊராட்சிகோட்டை ஜீவா நகரில் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மூவர், கத்தி முனையில் மிரட்டி, 4,600 ரூபாயை பறித்து சென்றனர்.
அவர் புகாரின்படி பவானி போலீசார் விசாரித்தனர். இது தொடர்பாக பவானி, எலவமலை, மூவேந்தர் நகர் ஸ்ரீதரன், 22, சுப்ரமணியம், 27, ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான சிவாவை, 23, தேடி வருகின்றனர். ஸ்ரீதரன், சுப்பிரமணியை பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement