செஸ்: குகேஷ் 3வது இடம்

ஜாக்ரெப் : கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசன் (மொத்தம் 5 தொடர்) தற்போது நடக்கிறது. இதன் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடந்தது. இந்தியாவின் குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உட்பட 10 பேர் பங்கேற்றனர். முதலில் நடந்த 'ரேபிட்' முறையிலான போட்டியில் குகேஷ், 14 புள்ளியுடன் முதலிடம் பிடித்தார்.
அடுத்து 'பிளிட்ஸ்' (அதிவேகம்) முறையில் போட்டி நடந்தது. இதில் கார்ல்சன் 12.5 புள்ளியுடன் முதலிடம் பெற்றார். அமெரிக்காவின் வெஸ்லே (12), உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (12) அடுத்த இரு இடம் பெற்றனர். 18 சுற்றில் 4 வெற்றி, 3 'டிரா' செய்த குகேஷ் (5.5), 11ல் தோற்றதால் கடைசி இடம் (10) பிடித்தார்.
ரேபிட், பிளிட்ஸ் எனஒட்டு மொத்தமாக, கார்ல்சன் 22.5 புள்ளியுடன் சாம்பியன் ஆனார். வெஸ்லே (20) 2வது இடம் பெற்றார். குகேஷிற்கு (19.5) மூன்றாவதுகிடைத்தது. பிரக்ஞானந்தா (15) 9வது இடம் பெற்றார்.
மேலும்
-
கெம்கா கொலையில் தொடர்புடையவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை; பீஹார் போலீஸ் நடவடிக்கை
-
மருத்துவமனைகளில் 4,000 பணியிடங்கள் சுகாதார சங்கம் வாயிலாக நிரப்ப உத்தரவு
-
தர வரிசை பட்டியலில் திருச்சி விமான நிலையம் முதலிடம்
-
இன்றைய மின் தடை
-
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அதிபர் டிரம்ப் பெயரை பரிந்துரை செய்தார் இஸ்ரேல் பிரதமர்
-
திருவள்ளூர் புகார் பெட்டி