மக்களை தேடி மருத்துவ திட்டத்தை அமைச்சர் ஆய்வு



காரிமங்கலம், தர்மபுரியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொள்ள வந்த, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று காலை, 6:00 மணிக்கு பஞ்சபள்ளி அருகே ஆளஅள்ளி மலைக்கிராமத்தில் நடைபயிற்சியை தொடங்கி, ஏரிபஞ்சப்பள்ளியில், 9:00 மணிக்கு முடித்தார்.


அப்போது பெட்டமுகிலம் பஞ்சாயத்து ஆளஹள்ளி மலைகிராமத்திற்கு சென்று மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களிடம் தமிழக அரசின் திட்டங்கள் முழுமையாக கிடைக்கின்றனவா என கேட்டறிந்தவர். இந்த ஆய்வின் போது, மருத்துவர்கள், அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement