திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா



தர்மபுரி,;தர்மபுரி அருகே, நேரு நகரில் திரவுபதியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த, 5 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.


நேற்று காலை, 8:30 மணிக்கு, 2ம் கால யாகசாலை பூஜை செய்யப்பட்டு, திரவுபதியம்மன், மஹா மாரியம்மன், விஷ்ணு துர்கை, நவகிரகம், பால கணபதி, பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, பிரம்மி, வைஷ்ணவி, நாகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் தெளித்து, கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் திரவுபதியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை, திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

Advertisement