கூகலுார் கிளை வாய்க்கால் பாசனத்தில் நெல் நடவுப்பணி 80 சதவீதம் நிறைவு

கோபி :கூகலுார் கிளை வாய்க்காலில், நெல் நடவுப்பணி, 80 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், கொடிவேரி தடுப்பணையில் தடுத்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனமாக, 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. தலை

மதகில் இருந்து 78 கி.மீ., நீள தடப்பள்ளி வாய்க்காலின், 36வது கி.மீ., தொலைவில், பாரியூர் அருகே உருளை என்ற இடத்தில், கூகலுார் கிளை வாய்க்கால் பிரிகிறது. இந்த வாய்க்கால் மூலம், 21 கி.மீ., தொலைவுக்கு, 3,200 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. கடந்த மே 26 முதல் செப்., 22ம் தேதி வரை, 120 நாட்களுக்கு தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவுள்ளது.


அதேபோல் கடந்த மே, 28 முதல் கூகலுார் கிளை வாய்க்கால் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதைக்கொண்டு விவசாயிகள், ஏ.எஸ்.டி., 16 மற்றும் டி.பி.எஸ்., 5 ரக விதை நெல்லை நாற்றாங்காலில் விதைத்திருந்தனர். நாற்றாக முளைத்த நிலையில் நடவு செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மாடு மற்றும் டில்லர் மூலம் நடவுப்பணி நடக்கிறது. இதுவரை கூகலுார் கிளை வாய்க்கால் பாசனத்தில், 80 சதவீத நடவுப்பணி நிறைவு பெற்றுள்ளது. இன்னும் ஒருவாரத்துக்குள், எஞ்சிய நெல் நடவுப்பணி நிறைவுபெறும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement