மினிமம் பேலன்ஸ் அபராத தொகை வசூலிப்பை கைவிட வங்கிகள் முடிவு

புதுடில்லி: சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காவிட்டால், அபராதத் தொகை வசூலிக்கும் நடைமுறையை கைவிட, வங்கிகள் பரிசீலித்து வருகின்றன.
தனியார் வங்கிகள் பெரும்பாலும், சம்பள கணக்குகள் மற்றும் பிக்சட் டிபாசிட் வைத்துள்ள வாடிக்கையாளர்களின் சேமிப்பு கணக்குக்கு, குறைந்தபட்ச இருப்பு வரம்பு விதிப்பதில்லை.
எனவே பொதுத்துறை வங்கிகளை விட இத்தகைய சலுகை வழங்கும் தனியார் வங்கிகளில் கணக்கு துவங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
எனவே, குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வங்கி கணக்குகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை கைவிட பொதுத்துறை வங்கிகள் முடிவு செய்துள்ளன. ஏற்கனவே, கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் இந்தியன் வங்கி இதை அமல்படுத்தி விட்டன. குறைந்தபட்ச இருப்பு தொகைக்கு பதிலாக, டெபிட் கார்டு, ஏ.டி.எம்.,மில் கூடுதல் பரிவர்த்தனைக்கான சேவைக் கட்டணம் போன்றவற்றின் வாயிலாக, வருவாய் பெற திட்டமிட்டுள்ளன.
வங்கிகளில், நிகர லாபத்தை விட கூடுதலாக அபராத கட்டணம் வசூலித்தது குறித்த தகவல் வெளியானது மற்றும் மத்திய நிதி அமைச்சக கூட்டங்களில் எழுப்பப்பட்ட விமர்சனங்கள் ஆகியவற்றால், குறைந்தபட்ச இருப்புத் தொகைக்கு அபராதம் விதிப்பதை கைவிட பொதுத்துறை வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.











மேலும்
-
இந்தூர்- ராய்ப்பூர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; அவசர தரையிறக்கம்!
-
பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: சிரஞ்சீவி உள்ளிட்டோர் இரங்கல்
-
சுற்றுச்சூழலை வலியுறுத்தி சைக்கிள் பயணம்
-
மின்சார பஸ்களுக்கான சார்ஜ் ஏற்றும்போது திடீரென பேட்டரி வெடித்து 2 பேர் காயம்
-
எண்கள் சொல்லும் செய்தி
-
ஆடலாம், பாடலாம், ஆனால் இப்படி செய்யலாமா ? நெட்டிசன்கள் கலாய்ப்பில் சிக்கினார் சிங்கர் நேகா