அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ கொடியேற்றம்
திருவண்ணாமலை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆனி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலிலுள்ள தங்க கொடிமரத்தில், ஆண்டுக்கு, 4 முறை கொடியேற்றம் நடக்கிறது. இதில், சூரியன் தெற்கு திசையை நோக்கி நகரும் காலமான, ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக, ஆனி பிரம்மோற்சவ விழா, அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேற்று காலை, ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் மூலவர் மற்றும் உற்சவ மூர்த்தி
களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர், விநாயகர், அருணாசலேஸ்வரர் உடனுறை உண்ணாமலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தங்க கொடிமரம் முன் எழுந்தருளினர். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஆனி மாத பிரம்மோற்சவ கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து, 10 நாட்களுக்கு விழா நடக்கும்.
மேலும்
-
அமெரிக்காவில் விபத்து: தெலுங்கானாவை சேர்ந்த 4 பேர் பலி!
-
ஒரே நாளில் 10 துறை செயலர்களுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின்
-
கப்பல் கட்டுமான வளர்ச்சிக்கு 8 இடங்களில் மெகா மையங்கள் தமிழகத்திலும் அமைக்கப்படுகிறது
-
நேபாளத்தில் டி.வி.எஸ்., ஜூபிடர்
-
கென்யாவில் அரசுக்கு எதிராக வெடித்தது கிளர்ச்சி : 11 பேர் சுட்டுக் கொலை
-
ஏ.ஐ., இயந்திரங்கள் இடம்பெறும் திருப்பூர் 'நிட்ஷோ' கண்காட்சி