கென்யாவில் அரசுக்கு எதிராக வெடித்தது கிளர்ச்சி : 11 பேர் சுட்டுக் கொலை

நைரோபி: கென்யாவில் அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது 11 பேர் சட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.
கென்யாவில் 1990ம் ஆண்டு அப்போது சர்வாதிகாரியாக இருந்த அதிபர் டேனியல் அரப் மொய்க்கு எதிராக மக்கள் போராட்டத்தில் குதித்தனர். அதே ஆண்டு ஜூலை 7ம் தேதி நிகழ்ந்த போராட்டத்தில் டேனியல் அரப் மொய் ஆட்சி முடிவுக்கு வந்தது.
35 ஆண்டுகள் நிறைவு அடைந்த அப்போராட்டத்தை நினைவு படுத்தும் வகையில் நேற்று கென்ய தலைநகர் நைரோபியில் மக்கள் போராட்டத்தில் இறங்கினர். அந்நாட்டின் தற்போதைய அதிபர் வில்லியல் ரூடோ பதவி விலகுமாறு அவர்கள் முழக்கமிட்டனர்.
பேரணியாக சென்ற போராட்டக்காரர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் முன்னேறவிடாமல் தடுத்தனர். அப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் மூண்டது. ஒரு கட்டத்தில் போலீசாரை போராட்டக்காரர்கள் தாக்க ஆரம்பித்தனர்.
இதையடுத்து கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசிய போலீசார், பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 11 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து கென்யாவில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந் நிலையில் உள்துறை அமைச்சர் கிப்சும்பா முர்கோமென் கூறி இருப்பதாவது;
பாதுகாப்பு படையினர் முழு வீச்சில் உஷாராக இருக்கிறோம். ஊர்வலங்களில் ஊடுருவி, மக்களை குழப்பத்தில் வைத்திருக்கவும் சொத்துகளை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டவர்களையும் கையாள தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில் கென்யாவில் அமைதியற்ற சூழல் காணப்படுகிறது. அங்குள்ள பெரும்பாலான கல்வி நிலையங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டு உள்ளன. தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருவதால்,அங்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன.
மேலும்
-
பீஹாரில் அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 35 % இட ஒதுக்கீடு; முதல்வர் நிதிஷ் அறிவிப்பு
-
இந்தூர்- ராய்ப்பூர் இண்டிகோ விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; அவசர தரையிறக்கம்!
-
பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: சிரஞ்சீவி உள்ளிட்டோர் இரங்கல்
-
சுற்றுச்சூழலை வலியுறுத்தி சைக்கிள் பயணம்
-
மின்சார பஸ்களுக்கான சார்ஜ் ஏற்றும்போது திடீரென பேட்டரி வெடித்து 2 பேர் காயம்
-
எண்கள் சொல்லும் செய்தி