நேபாளத்தில் டி.வி.எஸ்., ஜூபிடர்

காத்மாண்டு : டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், அதன் புதிய ஜூபிடர் ஸ்கூட்டரை நேபாளத்தில் அறிமுகம் செய்துள்ளது. அங்குள்ள 'ஜகதம்பா மோட்டார்ஸ்' நிறுவனம், இந்த ஸ்கூட்டரை நாடு முழுதும் வினியோகம் செய்ய உள்ளது.

டி.வி.எஸ்., நிறுவனம் ஆப்ரிக்கா, தெற்காசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு உள்ளிட்ட 80க்கும் அதிகமான நாடுகளுக்கு இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்கிறது. 2014 முதல் இதுவரை, 80,000க்கும் அதிகமான ஜூபிடர் ஸ்கூட்டர்களை ஏற்றுமதி செய்துள்ளது.

Advertisement