காகித ஆலையில் மயங்கி விழுந்த டிரைவர் பலி

கரூர், வேலுார் மாவட்டம், காட்பாடி அம்முண்டி பகுதியை சேர்ந்தவர் ரவி, 54, லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் வேலுாரில் இருந்து, குளோரின் வாயு அடங்கிய சிலிண்டர்களை, லாரியில் ஏற்றிக்கொண்டு, கரூர் அருகே உள்ள புகழூர் காகித (டி.என்.பி.எல்.,) ஆலைக்கு நேற்று முன்தினம் வந்தார்.


பிறகு, லாரியில் இருந்து இறங்கிய டிரைவர் ரவி, நெஞ்சு வலி காரணமாக திடீரென மயங்கி கீழே விழுந்தார். அருகில், இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ரவி மனைவி லட்சுமி, 43, கொடுத்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement