ரூ. 30.71 லட்சத்தில் சிமென்ட் சாலை

அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் அம்பேத்கர் நகர் பகுதியில், சாலை வசதிகள் இல்லாமல், அப்பகுதி குடியிருப்பவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சாலை அமைக்க கோரி, பொதுமக்கள் மக்கள் , எம்.எல்.ஏ.,விடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

அதனை அடுத்து, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் சிமென்ட் சாலை அமைக்க, 30.71 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை, பாஸ்கர் எம்.எல்.ஏ., நேற்று துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், செயற்பொறியாளர் பக்தவச்சலம், அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement