பெங்களூரு வாலிபர் தி.மலையில் கொலை

அடுக்கம்பாறை:பெங்களூரு வாலிபர் வெட்டி கொல்லப்பட்டார்.

திருவண்ணாமலை அடுத்த அல்லியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் பழனி, 50. அவரது உறவினர் ராகுல், 23. இவரது சகோதரர் கிரண், 20; பெங்களூரைச் சேர்ந்த இவர்கள், குடும்பத்துடன் இரண்டு நாட்களுக்கு முன், பழனி வீட்டிற்கு வந்தனர். நேற்று முன்தினம் மாலை ராகுல், கிரண், அவரது குடும்பத்தினர் அல்லியந்தல் பஸ் நிறுத்தம் அருகே நின்றிருந்தனர்.

அப்போது, அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், 32, மதுபோதையில் ராகுல், அவரது குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளார். இரு தரப்பினரும் அவரவர் வீட்டிற்கு சென்று விட்டனர்.

கார்த்திகேயன், தன் ஆதரவாளர்களான கவுதம், விஜி, அருண் ஆகியோருடன், பழனி வீட்டிற்கு சென்று, அவரை தட்டிக்கேட்டார். அப்போது, இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது, கார்த்திகேயன் வெட்டியதில், ராகுல், கிரண் படுகாயமடைந்தனர். இருவரும், திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ராகுல் வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு உயிரிழந்தார். பாச்சல் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement