மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் தற்கொலை முயற்சி

பண்ருட்டி: பண்ருட்டி அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில், கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆம்பூரை சேர்ந்தவர் பழனி,63; இவரது மனைவி பாஞ்சாலி,55; இருவரும், பண்ருட்டி அருகே கொக்குப்பாளையம் கிராமத்தில் தங்கி, குத்தகைக்கு கொய்யாத்தோப்பு எடுத்து கடந்த 3 ஆண்டுகளாக விவசாயம் செய்தனர்.
இந்நிலையில், நேற்று காலை 7:30 மணியளவில், அப்பகுதியை சேர்ந்த ராமு என்பவர், கொய்யா தோப்பில் உள்ள பழனி வீட்டில் பால்வாங்க வந்தார். கதவு உட்புறமாக தாழ்பாள் போடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்துள்ளனர்.
அப்போது, தம்பதியர் இருவரும் மயங்கிய நிலையில் கிடந்தனர். அவர்களை, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு டாக்டர் பரிசோதித்ததில், பாஞ்சாலி ஏற்கனவே இறந்தது தெரிந்தது. மேல்சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் பழனி சேர்க்கப்பட்டார்.
இதற்கிடையே, அவரது மகன் ரவி, புதுப்பேட்டை போலீசில் அளித்த புகாரில் 'எனது தாய் பாஞ்சாலிக்கு நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தாய் இறந்ததால் தானும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதாக தந்தை கூறியிருந்ததாக' தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும்
-
சீனா-நேபாள எல்லையில் மண் சரிவு: 17 பேர் மாயம்
-
'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள்: 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன?
-
உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்: டில்லிக்கு 9வது இடம்
-
வன மஹோத்சவம் - காவேரி கூக்குரல் சார்பில் தமிழகமெங்கும் நடைபெற்ற மரம் நடும் விழாக்கள்
-
முற்றியது தந்தை - மகன் மோதல்; அன்புமணிக்கு எதிராக பா.ம.க., செயற்குழுவில் தீர்மானம்
-
போலீஸ் விசாரணையில் இளைஞர் மரண வழக்கு; விசாரணை அறிக்கை தாக்கல்