நவீன்குமாரிடம் நலம் விசாரித்த நடிகர் விஜய்

திருப்புவனம்: அஜித்குமார் சகோதரர் நவீன்குமாரிடம் நடிகர் விஜய் அலைபேசியில் நலம் விசாரித்தார்.

நகை திருட்டு சம்பந்தமான விசாரணைக்கு சென்ற அஜித்குமாரை போலீசார் அடித்து கொலை செய்தது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு நடிகர் விஜய் மடப்புரத்திற்கு நேரில் வந்து ஆறுதல் கூறினார்.

அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கினர். ஜூலை 6ம் தேதி உடல்நலம் குன்றியதால் நவீன்குமார் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். தகவலறிந்த நடிகர் விஜய் கட்சி நிர்வாகி போன் மூலம் நவீன்குமாரை நேற்று முன்தினம் இரவு நலம் விசாரித்துள்ளார்.

Advertisement