விழுப்புரம்-புதுச்சேரி பாசஞ்சர் ரயில் 10ம் தேதி முதல் 5 நாட்களுக்கு ரத்து
புதுச்சேரி: விழுப்புரம்-புதுச்சேரி பாசஞ்ர் ரயில், வரும் 10ம் தேதி முதல் 15 வரையில், முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே, திருச்சி கோட்ட அலுவலகம் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் விழுப்புரம் வழியாக இயக்கப்படும் சில ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் இருந்து காலை 5:25 மணிக்கும், புதுச்சேரியில் இருந்து காலை 8:05 மணிக்கும் புறப்படும் விழுப்புரம்-புதுச்சேரி பாசஞ்சர் ரயில்கள் (எண்- 66063 மற்றும் 66064) வரும் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரையில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
தாம்பரத்தில் இருந்து காலை 9:45 மணிக்கு விழுப்புரத்திற்கு புறப்படும் தாம்பரம் - விழுப்புரம் பாசஞ்சர் ரயில் (எண் 66045) வரும் 12 மற்றும் 15ம் தேதிகளில் முண்டியம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்.
அதேபோன்று விழுப்புரத்தில் இருந்து பகல் 2:40 மணிக்கு சென்னை கடற்கரைக்கு புறப்படும் பாசஞ்சர் ரயில் (எண் 66046) வரும் 12 மற்றும் 15ம் தேதிகளில் முண்டியம்பாக்கத்தில் இருந்து பகல் 2:55 மணிக்கு புறப்பட்டு செல்லும்.
விழுப்புரத்தில் இருந்து பகல் 2:35 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் (எண் 66019), ஜூலை 12 மற்றும் 15ம் தேதிகளில் 30 நிமிடம் தாமதமாக 3:05 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள்: 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன?
-
உலகின் 'பிசி'யான விமான நிலையங்கள்: டில்லிக்கு 9வது இடம்
-
வன மஹோத்சவம் - காவேரி கூக்குரல் சார்பில் தமிழகமெங்கும் நடைபெற்ற மரம் நடும் விழாக்கள்
-
முற்றியது தந்தை - மகன் மோதல்; அன்புமணிக்கு எதிராக பா.ம.க., செயற்குழுவில் தீர்மானம்
-
போலீஸ் விசாரணையில் இளைஞர் மரண வழக்கு; விசாரணை அறிக்கை தாக்கல்
-
அ.தி.மு.க.,வை யாராலும் அசைத்து கூட பார்க்க முடியாது; இ.பி.எஸ்.,