கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது செக்ஸ் புகார்

3

பெங்களூரு: கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் மீது செக்ஸ் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள், 27. இவர் உபி.,மாநில உள்ளூர் அணிக்காக விளையாடி வருவதுடன் இந்தியன் பிரிமீயர் கிரிக்கெட் தொடரின் பெங்களூரு அணியிலும் இடம் பெற்றுள்ளார். காஸியாபாத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் அவர் மீது செக்ஸ் மற்றும் மோசடி செய்ததாக புகார் அளித்துள்ளார்.

அவரது புகாரில் " கிரிக்கெட் வீரர் யாஷ் தயாள் தன்னிடம் பல நாட்களாக நட்பில் இருந்தார். என்னை திருமணம் செய்து கொள்வதாக பல முறை செக்ஸ் தொந்தரவு செய்தார். உடல் ரீதியாக நான் பாதிக்கப்பட்டேன் ஆனால் தற்போது திருமணம் செய்ய மறுக்கிறார். இதனால் நான் மனமுடைந்தேன். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகாரில் கூறியுள்ளார். போலீசாரும் இவரிடம் வாக்குமூலம் பெற்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனால் அவர் போலீசாரால் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.


@block_B@

சென்னை அணி தோல்வி


கடந்த ஆண்டும், இந்த ஆண்டும் நடைபெற்ற இந்தியன் பிரிமீயர் லீக் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி நேரத்தில் இவரின் சிறப்பான பந்துவீச்சால் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. block_B

Advertisement